Friday 13 April 2018

விளம்பி வருஷம் காவிரியில் தண்ணீர் பெற்று தருமா?

14.04.2018 காலை 06.05 நிமிடத்தில் பிறக்கும் தமிழ் புத்தாண்டான விளம்பி

வருஷத்தை தமிழர்கள், போற்றி வணங்குவோம். இவ்வருட பலன்களில்,

ராசிகளுக்கு பலன் எழுத போன எமக்கு, பிடரியில், யாரோ, தட்டுவது போல்

இருந்தது. விழித்துக்கொண்டேன். காவிரியில், தண்ணீர் வந்தாலே, எல்லா

ராசிக்கும் நல்ல பலன் தானே.? இறை அருள் வேண்டுதல் செய்து, பலன்,

எழுதுகின்றேன்.  காவேரி வாரியம் அமைத்து தண்ணீர் கிடைக்குமா அல்லது

நல்ல மழை பெய்து, கரைபுரண்டு ஓடுவாளா  காவேரி. பலனை பார்போம்.

சூரியனை தவிர, அனைத்து கிரகங்களும், நம் தமிழகர்களின், மனசை

 குளுர்விக்க போகின்றதாக, பலன்கள்,பறைசாற்றுகின்றன. எப்படி.?

அரசியல் வாதிகளின்,  சூட்ஷி, பலிக்க போவதில்லை.  அனைத்துகிரகங்களும்,

ஒன்றுசேர்ந்து,  அரசியல் சூட்சியை, சாத்வீக, முறையினால், முறியடிக்க

போகின்றது. நிச்சயமாக, அறவழிபோராட்டம்,வெற்றி அடையப் போகின்றது.

அனைத்துகிரகங்களும், ஒன்றுசேர்ந்து,தமிழக மக்களின்

நீண்டகால,எதிர்பார்ப்பை

நிறைவேற்றி கொடுக்கபோகின்றது. பார்போம் காவேரியா, நல்ல மழையா?

பொருத்து இருந்து பார்போம். வெற்றி நிச்சயம்.

19.052018  யாம் எம்முடைய விளம்பி வருட,பலன் சொல்லும் பதிவில்

கூறியவை , பலித்துவிட்டது,  விளம்பி வருட பலன் பலித்துவிட்டது.

ஜோதிடம்,உண்மை என்பதை,பறைசாற்றி விட்டது.உண்மை ஜெய்த்து

 விட்டது.

வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம், அனுதினமும் ஜோதிடத்தை சுவாசித்து,

ஜீவிப்போம்......




Sunday 8 April 2018

காவேரி வாரியம் நடிகர்களின்,யதார்த்தமற்ற கண்டனக்கூட்டம்

காவேரி வாரியம் அமைக்காததை கண்டித்து அறவழி போராட்டம் நடத்திய

நடிகர்கள் சங்கமத்தில், தங்களுடைய, கண்டனத்தை தெரிவிக்கும் முகங்கள்,

ஒருசிலரிடம்,மட்டும்  காணமுடிந்தது, வருத்தத்துக்கு உரியதே.

திருமண, திரைப்பட விழாவில்,சந்தித்து,  கை குலுக்கி கொள்ளும்,

கலாசாரம், சிரித்து பேசிக்கொண்டு, நலம் விசாரிக்கும், கலந்துரையாடலை,

காணும்போது, தமிழக மக்களாகிய, நாம், எவளவு  கேனையர்கள்,என்பதை,

நமக்கு நாமே  சபாஷ், போட்டுகொண்டு, மார் தட்டி கொள்ள வேண்டும், என்று

நினைக்க தோன்றுகின்றது.  காவேரி  தண்ணீர், கரை புரண்டு, ஓடும் என்றே,

தோன்றுகின்றது.  தமிழகம் நிச்சயம் தன்னுடைய ஏமாளித்தனத்தில்,இருந்து,

விடுபட, வாய்ப்பு  இல்லை என்றே தோன்றுகின்றது. அப்பாவி தமிழக,

மக்களை,கடவுள், தான் காப்பாற்ற வேண்டும். தமிழக மக்கள்

இருந்தாலும் இவ்வளவு அப்பாவியாக இருக்கக்கூடாது.


Tuesday 20 March 2018

ம . நடராஜன் அவர்களின் மறைவு,அரசியல் களத்தில் கலக்கம் யாருக்கு?

திருவாளர், ம.நடராஜன்,  இன்று விடியற் காலை  இயற்கை எய்தினார்.

அன்னாரது,ஆத்மா,சாந்தி அடைய,எல்லாம் வல்ல இறைவன்,

அருள்புரியட்டும் இறைவன் திருவடி நிழலில் இளைபாரட்டும்.. மேலும்,

அவரது பிரிவினால்,  நேரடிபாதிப்பு, அடையும்,  அவரது, மனைவிக்கும்,

அவரது, குடும்ப உறுப்பினர்களுக்கும்,  எங்களது,மனப்பூர்வமான, இதய

சுத்தியுடன், ஆழ்ந்த,அனுதாபங்களை,  தெரிவித்து கொள்கின்றோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்,  நிறுவனரான,  TTV DINAKARAN,

அவர்களுக்கு,  எங்களின் ஆழ்ந்த, இரங்கலை, தெரிவிப்பதோடு, அவர்தம்,

பயணத்தில்,தொய்வின்றி பயணிக்க, இறைவன் அருள்புரியட்டும்.

ஏனையோரை, அரசனாக்கி,பார்க்கும், யோகம்,  அன்னாருக்கு, இருப்பினும்,

அவர் அரசனாகும் யோகம் இல்லாமல் போனதே, என்று,

 ஏங்கி,தவிக்கும் உள்ளங்களுக்கு,  ஆறுதல் சொல்ல, வார்த்தைகள்

இல்லை. நிச்சயமாக, உறுதியாக,  நிழலாய்,நின்று,அவர் சாதித்ததை

இனி, இன்னொருவர்,நின்று,  செய்ய முடியுமா  என்பது  கேள்விக்குறியே?

அவருடைய,சாணக்கியத்தன, அரசியல், பெரும்பான்மையாரால்

புரிந்துகொள்ள முடியாத ஒன்றே.  அவருடைய தைரியம், அவரை நம்பி,

வாழ்ந்த,  உள்ளங்களுக்கு,  அரவணைப்பாக, இருந்திருக்கின்றது. தேசிய,

அரசியலில்,  அவரின்,நட்பு கலந்த,அணுகுமுறை,  அவரை நம்பி

இருந்தோருக்கு,  பயன்பட்டு வந்ததே உண்மை. ஏனோ,இறைவன் அவரை,

அழைத்துக்கொ ண்டு விட்டார்.  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து

  விடைபெறுகின்றேன்





.






Thursday 15 March 2018

அம்மா மக்கள்முன்னேற்ற கழகம் என்ன சாதிக்க போகின்றது? பார்போம்...

அம்மா மக்கள் முன்னேற்ற  கழகம்,  இன்று, கொடி ஏற்றப்பட்டு,

பிறந்துள்ளது..  இந்த கட்சி  TTV.DINAKARAN  தலைமை பொறுபேற்று,இன்று,

காலை,கொடி ஏற்றி துவங்கி உள்ளார்கள்.  கொடி ஏறறப்பட்ட, நேரத்தை,

கணக்கில்,எடுத்துக்கொண்டு,ஜாதகம்,கணிக்கப்பட்டு,  பலன்

 தீர்மானிக்கப்படுகின்றது.

இக் க  ட்சி, அரசில் பங்கு ஏற்கும்,வாய்ப்பு, சூரியனின், புக்தி காலத்தில், உள்ளது

அந்த நேரத்தில்,  தேர்தல், நடைபெறுமானால்  வெறறியை எதிர்பார்க்கலாம்.

இருப்பினும்,  இவர்  பெண்கள்,மற்றும், கிருஸ்துவர்கள், முஸ்லிம் ஓட்டுகளை

சற்று சிரமப்பட்டு வாங்க, வேண்டி இருக்கும். உழைப்பாளிகளின்,ஒட்டு இவர்

 பக்கம் தான். சதிவேலை செய்பவர்களின்,  செயல்கள், இவரை பெருதும்

 பாதிக்கும்.  மீனவர்களின் ஒட்டு,இவருக்கு தான்.   கணிப்பொறி யாளர்களின்,

வியாபாரிகளின்,ஓட்டை பெற இவர் அவர்களை கவரவேண்டும்,  நடு நிலை

யாளர்களின், புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் அவர்களின்

  ஒட்டு,இவருக்கு தான். தேசிய கட்சியின் பார்வை, இவரை,

ஈர்க்கும்.  மற்றவை பின்பு....  கீழே ஜாதகம் இணைக்கப்பட்டு உள்ளது.










Wednesday 28 February 2018

பரீட்சைஎழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்

இவ்வாண்டு  2018 ல்  பரீட்சை எழுதப்போகும் மாணவ செல்வங்களுக்கு,

எம்முடைய  வாழ்த்துகள்.  சோர்வின்றி,பயிலுங்கள்.  மனதில் நிறுத்தி

பயிலுங்கள்.  மிதமான, குளிர்ச்சியான,நீர்சத்து,நார்சத்து, மிகுந்த,

உணவினை,உண்டுவாருங்கள்,  அசைவ உணவை  உண்ண,

வேண்டாம்..  எளிதில் ஜீரண மாகும்  உணவை,  சாப்பிடுங்கள்.  நிறைய,

தண்ணீர் பருகுங்கள்.  விளையாட்டு,போட்டிகளில், கலந்துகொள்வதை,

தவிர்த்துவிடுங்கள்.   உங்கள் வீட்டில் விவாதம்  செய்வதை தவிருங்கள்.

தியானம்  செய்ய தெரிந்தால், செய்யுங்கள்.  நண்பர்களிடம்,அரட்டை,

அடிப்பதை,  தவித்து விடுங்கள்.  ஹயகிரீவரை,  வேண்டி  தியானம்

செய்து  வாருங்கள்.  அமைதியாக,  பயமின்றி,  தூங்குங்கள்.   பரீட்சை

எழுத  பயன்படுத்தும், பேனா,பென்சில்,  போன்றவற்றை,  நல்ல நிலையில்

வைத்துகொள்ளுங்கள்.  அந்த  உபகரணங்களை   போற்றி வணங்கி,

பயன்படுத்துங்கள்.   வெற்றி நிச்சயம்.  வாழ்த்துகள்.


ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு ஜெயேந்திரசரஸ்வதிஸ்வாமிகள் முக்தி அடைந்தார்

ஸ்ரீ காமகோடி காஞ்சி ஜகத் குரு ஜெயேந்திர சுவாமிகள் ஈசனின்  பாதகமலத்தில்

ஐக்கியமானார்.  அவரது திருவருளை,அன்றாடம்,பெற்று வாழ்வில், உயர்வு,

பெற்றோர், பல லக்ஷம் மக்கள். அத்தகைய,ஆன்மீக,சிந்தனையாளர்களின்,

வாழ்வில் அருளாசிகள்,தொய்வு இன்றி,கிடைக்கபெற்று,  நல்வாழ்வு,வாழ்ந்து,

அருளும் ஞானமும்,ஒருங்கே,இணைந்து பெற்று, வாழ  இன்றைய

பேர்அருளாளராகிய

  காஞ்சிமடத்தின்,  அருட்பெறும் ஜோதியாக,விளங்கும்,ஸ்ரீ காமகோடி

 விஜயேந்திரர், ஸ்வாமிகள்,  திடமான,சிந்தனைகளோடு, நின்று

அவர் வழியை பின் பற்றி, ஆஸ்தீக அன்பர்களுக்கு, அருள்பாலித்து,வழி

 நடத்தட்டும்.  அடியார்தம் திருவடிகள் போற்றி போற்றி.போற்றி......